Tuesday, 11 December 2012

மத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாணவி!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள்ளது மத்திய அ

ரசு.

ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இச்சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் .


இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.


இந்திய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது 1944 ம் ஆண்டு ஜூலை மாதம் 6 ம் தேதி சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியடிகளை முதன்முதலில் தேசத் தந்தை எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

Sunday, 15 January 2012

பலா மரம்

ரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே எனலாம். 
அதோடு, மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் ஆரோக்கியத்தோடு வாழவைக்கும் தன்வந்திரியாகவும் திகழ்கிறது.

இந்த வகைகளில் அதிக மருத்துவப் பயன் கொண்ட பலா மரம் பற்றி விரிவாக அறிவோம். 

பலாப்பழத்தை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.  அதன் சுவையை நினைத்தாலே நாவில் நீர் சுரக்கும். பலா இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மரமாகும்.    இதில் ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப் பலா என பல வகைகள் உண்டு.

பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
இதனை சக்கை, பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

பலா இலை


பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.  வாயுத் தொல்லைகள் நீங்கும்.

பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் ஆறும்.  பல்வலி நீங்கும்.

பலா இலையின்  கொழுந்தை  அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.

பலா பிஞ்சு

பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும், நீர்ச்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும்.  உடலுக்கு வலு கொடுக்கும். வாத, பித்த, கபத்தை சீராக வைத்திருக்கும்.  நரம்புத் தளர்வைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும்.  எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

பலாப்பழம்

முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது.  இரத்தத்தை விருத்தி செய்யும்.  உடலுக்கு ஊக்கமளிக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும்.
பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு சீரணமாகும்.
பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .

http://www.besttravelthai.com/images/jackfruit.jpg

மஞ்சள்  நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ  சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .
எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .

பலாக் கொட்டை

பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர்.  அதற்கு ஒரு பலாக்கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும்.

பலாக் கொட்டைகளை சுட்டும், அவித்தும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும்.  வாயுத் தொல்லைகளை நீக்கும்.
பலாமரத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.

Saturday, 14 January 2012

மௌனகுரு ஒரு சிறப்பு பார்வை....

எத்தனைப்பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அமைதியாக இருப்பவர்களையும், அமைதியாலே மக்களுக்கு போதனை செய்பவர்கள்தான் மௌனகுரு ‌என்று அழைப்பார்கள். அவர்கள் செயல்பாடு பேச்சில் இருக்காது. செயலில்தான் இருக்கும்.

ஆனால் எதுவும் சொல்லாது, எதையும் செயலில் காட்டாது நமது இந்தியாவை ஆட்சி செய்கிறார் ஒரு மௌனகுரு அவரைப்பற்றிய வேதனையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு பதிவுதான் இது.


பொறுமை.. பொறுமை எதுக்காக படபடப்பாக பேசுறீங்க... அமைதியா இருங்க... இதோ நான் 7, 8 வருஷமா இப்படித்தானே இருக்கேன் ஏன் என்னை பார்த்து கத்துக்கங்க... எதுக்கும் அவசரப்படக்கூடாது என்ன நான் சொல்றது...!

என்னுடைய சாதனைகளை சொல்றேன் கேளுங்க...!
வடஇந்தியாவில் எவ்வளவு மதக்கலவரம் நடந்துச்சி நான் ஏதாவது வயைத்திறந்து கருத்தோ... கண்டனமோ.... சொன்னேனா..?


பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் செஞ்சாங்க அதைப்பத்தி நான் ஏதாவது
வயைத்திறந்தேனா..?


 மும்பை தாஜ் ஓட்டல் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்
நடந்துனாங்க... அப்ப ஏதாவது நான் வாயை திறந்து பேசினேனா..?


 தமிழ்நாட்டுக்கும் கர்நாடாகாவிற்கும் காவிரிப்பிரச்சனை நடந்தது அதை பத்தி நான் ஏதாவது கருத்து சொன்னேனா, இல்ல அதுல தலையிட்டேனா...?


இருங்க பாஸு.. நான் இன்னும் முடிக்கல....


அப்புறம் ஆந்திராவில எவ்வளவு நாளா தனிமாநிலம் கேட்டு
அடம்பிடிச்சிக்கிட்டு இருக்காங்க... அவங்க எவ்வளவு போராட்டம் பண்ணாலும், அரசுக்கு எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், தேவையில்லாத நான் தலையிட்டு மத்தவங்கள பகைச்சிக்க மாட்டேன்.


அவ்வளவு ஏன்... இலங்கையில் லட்சக்கணககான தமிழர்களை கொன்று குவிச்சாங்க...
நாட்டில் இருந்து எத்தனையோ போர் சொன்னாங்க.. கடிதமெல்லாம் போட்டாங்க...
அதைப்பத்தி நான் ஏதாவது வாய் திறந்தேனா..?


இப்ப..! இந்த கூடங்குள பிரச்சனையிலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையிலும் நான் தலையிடவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கும் எனக்கும் என்ன இருக்கிறது. நான் இருப்பது டெல்லியில் நீங்க இருப்பது தமிழகத்தில் அது உங்க பிரச்சனை..

நீங்க எப்படிவேண்டுமானாலும் அடிச்சிக்கங்க ஏது வேண்டுமானாலும்
பண்ணிக்கங்க நான் மட்டும் வரவும் மாட்டேன் வாயையும் திறக்க மாட்டேன்.

 இவ்வளவும் சொல்லியும் நீங்கதான் பிரதமரு, நீங்க தான் தலையிடனும் அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு வந்தீங்கன்னா அவ்வளவு தான். அப்புறம் நான் ஏதாவது நாட்டுக்கு சுற்றுப்பயணம் போயிடுவேன்.


நான் அழுகிறேனா.. அது தூசு தம்பி.. நான் எதுக்கும் அசரமாட்டேன்.


எனக்கு இலங்கைத் தமிழர்களை விட அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மீதுதான்
எனக்கு அக்கறை. மேலிடத்தில் இருந்து அதான் எனக்கு உத்தரவு...
மேலிடம்மன்னா யாருன்னு கேட்கிறீங்களா..?


என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவங்க கூட நான் எது சொன்னாலும் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க... கேரளா காங்கிரஸ் காரனும், ஆந்திரா காங்கிரஸ் காரனும் எப்படிங்க என் பேச்சை கேட்பாங்க...


 இந்த ராஜா, எப்போ என்ன 2ஜி கேஸ்ல மாட்டிவிடுவான்னு நானே பயந்துகிட்டு இருக்கேன். இதுல முல்லை பெரியாறு... கூடங்குளம் ன்னு சொல்லிக்கிட்டு.. போங்கய்யா போங்க...


பாருங்க தம்பி, நான் யார் பேச்சுக்கும் போக மாட்டேன். என்னையும் எந்த
விளையாட்டுக்கும் கூப்பிடாதீங்க...


பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் அப்படின்னு எதுல வேணுமனாலும் என்னைப்பத்தி போடுங்க அதைபத்தியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நான் ரொம்ப நல்லவன். இது என்தாயி சோனியா ஜி-க்கு தெரியும்.


இதோ பாருங்க கடைசியா நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். சோனியா ஜீ சொல்றதை மட்டும் செய்யறுதுக்கு மட்டும்தான் நான் ஆளு.. உங்க இஷ்டத்துக்கு கேட்டுகிட்டே போன எப்படி..? கேட்டுக்கங்க அதைப்பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை.

=========================================

பாருங்க தல... நீங்க ஆட்சி செய்யறது எங்கள மாதிரி பொது மக்களுக்கும்,
நாட்டு இருக்குற ஏழைகளுக்கும் தான் அதை மட்டும் கொஞ்சம்
தெரிஞ்சுக்கங்க...

ஒரு பிரமதரா இருந்துகிட்டு நாட்டு நடக்கிற அக்கிரமங்களையும்,
அநியாயங்களையும், ஏழைகளுடைய வாழ்வாதாரங்கள் பறிபோகரதையும்
பார்த்துக்கிட்டு இப்படி இருந்தா நாம் எப்படி முன்னேறறுது....

பொது அறிவுத் தகவல்கள்

தொகுப்பு : என். சுரேஷ்குமார்


கருவிகளும் பயன்களும்

1.    
 ஏரோமீட்டர் (Aerometer)காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

2.    
 அம்மீட்டர் (Ammeter)-  மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

3.    
 ஆடியோமீட்டர் (Audiometer)-  மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

4.    
 போலோமீட்டர் (Bolometer)-  வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

5.    
 கிரையோமீட்டர் (Cryometer)-  குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

6.    
 எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)-  மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

7.    
 மேனோமீட்டர் (Manometer)-  வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

8.    
 டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.

9.   
 வெர்னியர் (Vernier)-  சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

10. 
 பைரோமீட்டர் (Pyrometer) -  அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

11.  
 பாத்தோமீட்டர் (Fathometer)-  ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

12.  
 டைனமோ (Dynamo)-  எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

13.  
 வேவ்மீட்டர் (Wavemeter)-  ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.

14.  
 பிளானிமீட்டர் (Planimeter)-  பரப்பை அளவிடும் கருவி.

15.   
 ரெக்டிஃபையர் (Rectifier)-  ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

16.   
 டென்சிமீட்டர் (Tensimeter)-  ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

எதைப்பற்றியது?

1.
 பேடாலஜி (Pedology)-  மண் அறிவியல் குறித்த படிப்பு.

2.
 பெட்ராலஜி (Petrology)-  பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

3.
 சூஜியோகிராபி (Zoogerogrphy)-  பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

4.
 சிஸ்மோலஜி (Seismology)-  பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

5.
 ஹைட்ராலஜி (Hydrology)-  பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

6.  
 கிளைமட்டாலஜி (Climatology)-  சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

7.
 பயோ ஜியோகிராபி (Biogeography)-  பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

எங்கேஅதிக உற்பத்தி?

1.  
 ஆப்பிள் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்.

2.
 வாழைப்பழம் குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம்.

3.
 இஞ்சி கேரளம், மேகாலயா.

4.  
 கோகோ கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு.

5.
 திராட்சை மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம்.

6.
 மாம்பழம் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு.

7.
 ஆரஞ்சு மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, மேகலாயா.

8.
 மிளகு கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு

9.
 அன்னாசி பழம் அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா.

10 .
ஏலக்காய் - கர்நாடகம், சிக்கிம்,கேரளம், தமிழ்நாடு.

11. முந்திரி கேரளம், ஆந்திரம்.

எந்தத் தொழிற்சாலை எங்கே?

1.   
 ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).

2.   
 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் –  பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ.

3.   
 பாரத் அலுமினியம் நிறுவனம் சட்டீஸ்கர், மேற்கு வங்கம்.

4.   
 ஹிந்துஸ்தான் அலுமினியம்  ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).

5.   
 இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் –   பெங்களூரு.

6.   
 எச்.எம்.டி. வாட்ச் –  பெங்களூரு.

7.   
 நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் –  நேபாநகர்.

8.   
 நேஷனல் பெர்ட்டிலைசர்  லிமிட்டெட் –  நங்கால், பட்டின்டா, பானிப்பட், விஜய்பூர்.

9.   
 ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.

10.   
 ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா சிந்திரி, கோரக்பூர், ராமகுண்டம்.

அணைகளும் மாநிலங்களும்

1.   
 நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் )  -

கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.

2. 
 கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-

தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.

3.   
 கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-

கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித்  திட்டத்துக்கும்   இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.

4.   
 சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-

பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.

5.   
 சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-

ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.

6.    
 மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-

மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது

7.  
 பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-

சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.

8.     
 தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் 

தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும், விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.

9.  
 சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் 

நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுகுஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும்  நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.

10.    
 மேட்டூர் (தமிழ்நாடு)-

காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.

Monday, 2 January 2012

ஜி.டி. நாயுடு

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘இவரின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார்அறிஞர் அண்ணா.

'தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் அவ்வூர் மக்கள் அவரின் கண்டு பிடிப்பை பார்த்து பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன்

யார் அவர் ?


ஜி.டி. நாயுடு என்ற கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்களே
(மார்ச் 23, 1893 - 1974) தமிழகம் தந்த அறிவியல்மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.


இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார் எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.
ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.
சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.பின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.
முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன்முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.
இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப்படிப்பில்லாதி
ருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத்தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. "பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்".
அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

தமது கண்டுபிடிப்பு-களுக்கு மத்திய அரசு ஆத-ரவு காட்டாததைக் கண்டித்-தும், அதிகமான அளவில் வரி போட்டதை ஏற்காமலும் இருந்த நிலையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் ஏற்பாடு செய்தார் (13.1.1954).
வேலையில்லாத் திண்டாட்-டம் என்று கூட்டத்திற்குப் பொருள் கொடுக்கப்பட்டு இருந்தது.
உண்மையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, தம்மால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை பொது மக்கள் மத்தியில் உடைப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.
தந்தை பெரியார், டாக்டர் வரதராசுலு நாயுடு, ஆர்.வி. சாமிநாதன், ஏ.கோவிந்தசாமி, முன்னாள் அமைச்சர் எஸ். இராமநாதன், சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சின்ன-துரை, முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், வி.கே.கே. ஜான் எம்.எல்.சி., கே.டி. கோசல் ராம், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி முதலியோர் பங்கு கொண்டனர்.
பேசியவர்கள் அனை-வரும் மத்திய அரசை எதிர்த்து அந்தப் பொருள்-களை உடைக்க வேண்டும் என்று பேசினார்கள்.தந்தை பெரியார் பேசு-வதற்கு முன்பே பொருள்-களை உடைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டார் ஜி.டி. நாயுடு.

இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் நீங்கள் செய்த காரியம் பைத்தியக்-காரத்தனமான காரியம் _ முட்டாள்தனமானது என்று கடுமையாகப் பேசினார்.
முட்டாள்தனம் என்ற சொல்லை வாபஸ் வாங்குமாறு கூட்டத்தினர் கூச்சல் போட்-டனர். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ அதற்கு மேலும் சென்று மாபெரும் மடத்தனம் _ முட்டாள்தனம் என்று ஓங்கியடித்தார்.

எதை உடைக்கவேண்-டும்? இதற்குக் காரணமான டில்லி ஆட்சியையல்லவா உடைக்கவேண்டும் என்று கர்ச்சித்தார் தந்தை பெரியார்

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.
1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.
தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார். இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்..
கோவைக்கு முதன்முதலில் பாலிடெக்னிக்கை அறிமுகம் செய்த ஜி.டி. நாயுடுதான்.குறுகிய,திறமையான ம்ற்றும் துல்லியம்மானதுதான் ஜி.டி. ¿¡யுடுவின் பார்முலா.அவர் உருவாக்கிய சர்தார் ஷோப் பாலிடெக்னிக்கில் 45 நாட்களில் ஆட்டோ மொபைல் இன்ஜினியர்களையும், 42 நாட்களில் ரேடியோ இன்ஜினியர்களையும் உருவாக்கி காட்டினார். சென்னை கிண்டி பொறியியல் க்ல்லூரி பேராசிரியர்களும்,மாணவர்களும் இதனை ஆச்சர்யப்படுத்துடன் பார்த்துச்சென்றனர். இராணுவ அதிகாரிகளுக்கும் இதனை சொல்லிக்கொடுத்தார்.
வழக்கத்தைவிட நீண்ட இழைகள் தரும் பருத்தியை கண்டுப்பித்து அதன் விதைகளை 10 ரூபாய்க்கு விற்றார்.ஜெர்மானியர்கள் இதனை வாங்கி கலப்பினம் தயார் செய்து அத்ற்க்கு ” நாயுடு காட்டன் என பெயரிட்டனர். நாயுடு கண்டுபிடித்த பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பபட்டன. நாயுடு தயாரித்த நீரழிவு,ஆஸ்துமா,வெள்ளைபடுதல் போன்ற நோய்களுக்கான மருந்தை அமெரிக்க நிறுவனம்மான ஸ்பைசர் பெற்றுக்கொண்டது.
2,500 ரூபாய்க்கு சிறிய ரக கார் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து அதன் புளு பிரிண்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.இதற்க்கு மட்டும் மத்திய அரசு அனுமதியும்,ஆதரவும் கொடுத்திருந்தால் நானோ காருக்கு முன்பு நாயுடு கார் வந்திருக்கும். 7/11/1967 அன்று காலை9:30 க்கு அடிக்கல் நாட்டப்பட்டு மறுதினம் மாலை 3.45 க்கு முடிக்கப்பட்ட வீட்டின் திறப்புவிழா நடந்தது.டெக்னாலஜி என்பது சாமன்யனுக்கு எட்டாத உயரம் என்பதை மாற்றி எளிமைப்படுத்தியதுதான் உயர்திரு.ஜி.டி. நாயுடுவின் சாதனை. வழக்கம் போல் சுதந்திர இந்தியா நாயுடுவைக் கண்டு கொள்ளவில்லை.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.
இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.
ஜி.டி.நாயுடு போட்டோ கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார். இவரது பிரசிடெண்டு ஹாலில் பெரிய _ பெரிய போட்டோக்கள் நிரம்பி உள்ளன.

ஜி.டி.நாயுடுவுக்கு செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்கு கிட்டம்மாள், சரோஜினி என்ற 2 மகள்களும், 2_வது மனைவிக்கு கோபால் என்ற ஒரே மகனும் பிறந்தார்கள். ஜனாதிபதி வி.வி.கிரியும், மறைந்த தலைவர் பெரியாரும் நண்பர்களாக இருந்தார்கள்.

1973_ம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்தக்கொதிப்பி னாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டார்.

இதற்காக வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார்.

ஜி.டி.நாயுடு உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்த ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் ஜி.டி.நாயுடு பேசினார்.

4_1_1974 அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது. நினைவு இழந்தார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 9_45 மணி அளவில் ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார். உயிர் பிரிந்தபோது மனைவி ரெங்கநாயகி, மகன் கோபால், மகள்கள் கிட்டம்மாள், சரோஜினி, மருமகள் சந்திரலேகா ஆகியோர் அருகில் இருந்தார்கள்.
கோவையில் அவினாசி ரோட்டில் குடியிருந்த ஜி.டி.நாயுடு தனது வீட்டு எதிரிலேயே பெரிய வளாகம் ஒன்றை அமைத்தார். அங்கு மிகப்பெரிய காட்சிக்கூடம், கலை அரங்கம், திருமண மண்டபம் போன்றவை இடம் பெற்றுள்ளன. "பிரசிடெண்ட் ஹால்" என்று அது அழைக்கப்படுகிறது. இந்த காட்சி கூடத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த அனைத்து கருவிகள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருடைய சாதனைகளை சித்தரிக்கும் புகைப்படங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன.

நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு பெரிய கண்ணாடிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடும். (நம் உருவத்தை நாமே நம்ப முடியாத அளவுக்கு குட்டை நெட்டையாக காட்டும்)எந்த வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்து, மூளையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி, தொழிற்புரட்சியை எதிர்கொண்டு சாதனைகள் படைத்த ஒரு மாபெரும் மனிதரின் சாதனைகளுக்கு சாட்சியாக திகழ்கிறது இந்த அருட்காட்சியகம் இன்று வரை.......
தொகுப்பு
-பேகம் பானு
நன்றி : பேஸ்புக்
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\Saturday, 31 December 2011

சர்க்கரை நோயும் -நபிவழி மருத்துவமும்

"நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80)

மேற்கண்டபடி நோய்க்கான நிவார ணத்தை தானே தருவதாக அல் லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.  இதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.
கடந்த 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் வளர்ச்சி கண்டு வரும் யுனானி மருத்துவம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமு றையை அடிப்ப டையாகக் கொண் டுள்ளது.  எவருடைய வாழ்க்கை முறை சுன்னத்தான (நபி வழி) அடிப்படையில் அமைந்திருக்கிறதோ அவர்களுக்கு யுனானி மருத்துவம் அற்புதமான முறையில் பலனளிக் கும் என்பது திண்ணம்.
முஸ்லிம்கள் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்திலிருந்தும், நேரம் தவறி உண்ணும் பழக்கத்திலிருந்தும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது இஸ்லாம்.
ஒரு முஸ்லிம் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற நிலை யில் உணவுப் பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும். நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளது குறிப்பிடத்தக் கது.

நன்றாகப் பசித்த பின்னர்தான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. ஒருவருக்கு விருப்பமான உண வாக இருந்தாலும் அதை மூச்சு முட்ட உண்பதை தவிர்க்கச் சொல்கி றது இஸ்லாம்.
ஒரு முஸ்லிமின் சுன் னத்தான உணவுப் பழக்கம் என்பது, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்ட பின்னர் சுமார் அரை மணி நேரம்வரை நீர ருந்தக் கூடாது.
உணவின் சுவைக்காக மசாலாப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின் றன. ஆனால் தக்காளி, புளி, தேங்காய், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உணவை நன்றாக மென்று அரைத்து அதன்பின் உட் கொள்ள வேண்டும். இது உணவை விரைந்து செரி மாணமாக்கும். தரையில் அமர்ந்து உண்பது சிறப் பானதாகும்.
ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளை க்கு 6 முதல் 8 மணி நேரங்கள் வரை கண்டிப்பாக தூங்க வேண்டியது அவசியம். நீரிழிவு நோயாளி மதிய உணவுக்குப் பின் உடனடி யாக ஒரு மணி நேரமா வது தூங்குவது அவசியமாகும்.
ஆலிவ் (ஒலிவம்) எண் ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை பாதுகாக்க முடியும். ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்ப்பதும், பாதாம் எண்ணெயின் சில துளிகளை பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிக ளுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
நீரிழிவு நோயாளி உணவில் வினிகரை (காடி) சேர்த்துக் கொள்வது நல்லது. ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவுக்கு வினிகரை வழக்கமான சமையல் மற்றும் மசாலா பொருட்களோடு சேர்த்துக் கொண்டால் அற்புதமான முறையில் ஜீரணக் குறைபாடுகள் நீங்கும். ஒரு நீரிழிவு நோயாளி தேவையற்ற வகையில் உடலை வருத் திக் கொள்வதையோ மனஉளைச்சல் அடை வதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் வகை யில் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் (நன்மை தீமைகள்) அனைத்தும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கி றது என்பதை முஸ்லிம்கள் மன தார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயா ளிகள் சுத்தமான தேன், மாதுளை, கருப்பு திரா ட்சை, பேரீ ட்சை, அத்திக் காய், ஆலிவ் காய் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

நீரிழிவு நோயாளி ஒருவர் மேற்கண்டபடி நபிவழியி லான இயற்கை உணவுகளுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால் நிச்சயமாக நீரிழிவு நோயின் காரணமாக உண்டாகும் கிட்னி, இருதயம், நுரையீரல், மூளை, கண்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
நீரிழிவு நோய் என்பதை மருத்துவத்துறை மெட்டா போலிக் டிஸ்ஆர்டர் என்று அழைக்கிறது. அதாவது உடலுக்கு தேவையான இன்சூலின் சுரக்காமல் போவது அல்லது இன்சூலினை சுரக்கச் செய்யும் செல்கள் செயல்படாமல் போவதாகும். இதன் விளைவால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகளவு தாகம், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். நீரிழிவு நோய் என்பது இன்றைய நிலையில் மனிதர் களை மெல்ல மெல்லக் கொல்லும் மிகப்பெரும் ஆபத்து களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மருத்துவ உலகம் இது குறித்து எச்சரிக்கை செய்கின்றது.
எனவே நீரிழிவு நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ள மேற்சொன்ன நபிவழியில் அமைந்த உணவு முறையை கட்டுப்பாட்டோடு கடைபிடித்தால் சந்தோ ஷமாக, ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். 
- டாக்டர் ஹக்கீம் சையத் ஷா. ஷோய்புதீன், ஷிஃபா யுனானி ஹர்பல் கிளினிக்

Friday, 30 December 2011

ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல்

யுத்த முறைமைகளில் ஐந்தாம் பரிமாணம்என்று அது அழைக்கப்படுகின்றது. நிலம், கடல், வான், மற்றும் விண்வெளிகளுக்கு மேலதிகமாக இன்று இணைய(சைபர்) உலகமும் புதிய யுத்த முன்னரங்காக பரிமாற்றம் அடைகின்றது.

Cyberwar.jpg
தொழில்நுட்ப புதுமைகள், இன்றைய நாளின் யுத்த உத்திகளை மாற்றிக்கொண்டு வருகின்றன. இன்றைய உலகனிது ஆயுத களஞ்சியத்தில் புதிய கருவிகள் சேர்ந்துள்ளன. மின்காந்தவியல், நவீன தகவல்கள், மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் உதவியினால், புது வகையானதொரு இலத்திரனியல் யுத்தம் ஒன்று உருவாகியுள்ளது. சைபர் யுத்தம்அல்லது இணைய யுத்தம்என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தமானது பல்வேறு அரசாங்கங்களுக்கும், இராணுவங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைவதாக கருதப்படுகின்றது.

உங்களிடம் ஒருசில கெட்டித்தனமான மனிதர்களும், ஒரு கணினியும் இருந்தால் நிறைய விடயங்களை சாதிக்கலாம். யுத்த வானூர்தியோ, யுத்த தாங்கியோ, இராணுவமோ தேவைப்படாது. உங்களது நாற்காலியில் அமர்ந்தவாறே இன்னொரு நாட்டிற்குள் ஊடறுத்துச் சென்று பாரிய சேதத்தை ஏற்படுத்தலாம் என்று Alon Ben David என்கிற இஸ்ரேலினுடைய Channel 10 இனது இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

இன்று வளர்ந்து வருகின்ற விடயங்களாக சைபர் யுத்தங்கள் மாத்திரம் கருதப்பட முடியாது. இணையமானது இன்று இணைய கிளர்ச்சிகளை (Cyber Activism) முடுக்கிவிட்டுள்ளது. தகவல்களை பரிமாறுவதன் மூலம், ஆன்லைனிலும், வீதிகளிலும் தேவையான  நடவடிக்கைகளை, மக்கள் தாங்களாக எடுத்து செயற்படுத்துவதற்கான ஆதரவை இலகுவாக பெறக்கூடியதாக உள்ளது.

arton19173-8e070.jpg

அரபுலக நாடுகளில் அண்மைய காலங்களில் பரவி இருக்கும் புரட்சிகளை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களான Facebook, Twitter, YouTube ஆகியன இந்த புதிய இணைய கிளர்ச்சிகளுக்கு வழிசமைப்பதில் முன்னணி வகித்துள்ளன.
அராபிய வசந்தம் (Arab Spring) என்று அழைக்கப்படுகின்ற இந்த புரட்சியானது இலத்திரனியல் புரட்சியாக கருதப்படுகின்றது. போராட்டங்கள் தொடர்பான கள நிலவரங்களை தங்களது கையடக்க தொலை பேசிகளின் மூலம் நிழற்படங்கள் எடுத்து தங்களது கணினிகளின் ஊடாக வெளி உலகத்துக்கு பதிவேற்றம் செய்து தெரியப்படுத்தியதன் மூலம், சாதாரண குடிமக்கள், ஊடகவியலாளர்களாக மாறியுள்ளனர். அந்நாடுகளின் அரசாங்கங்கள் Satellite செய்தி நிறுவன சமிக்ஞைகளை இடைமறித்திருக்கலாம், வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தங்களது நாட்டினுள் நுழைவதற்கு தடைகளை விதித்திருக்கலாம், ஆனால் தங்களது சொந்த குடிமக்கள் அவர்களாகவே செய்தி தெரிவிப்பாளர்களாக மாறுவதிலிருந்து கட்டுப்படுத்த அந்த அரசாங்களால் முடியாமல் போயின.

இணைய கிளர்ச்சியிலிருந்து இணைய யுத்தம்
அரசியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தை உபயோகிப்பது ஒரு விடயம். ஆனால் கணினி வலையமைப்புக்களையும், தகவல் களஞ்சியங்களையும் ஊடறுத்து இடைமறிப்பது, இணைய யுத்தத்தை ஒரு படி மேலே நகர்த்துகின்றது. ஒரு சைபர் தாக்குதலானது (Cyber-Attack), அரசாங்கங்களினதும், பொருளாதார நிறுவனங்களினதும் முக்கிய செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்ய வல்லது என அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருப்பது ஒரு புறமிருக்க, ஐக்கிய அமெரிக்கா அதனை ஒரு பாரிய அச்சுறுத்தலாக கருதுகின்றது.

சைபர் வெளி எவ்வாறு உண்மையாக உள்ளதோ, அதனுடன் வரும் அபாயங்களும் உணமையே. இனி மேல், எமது எண்ணியல் கட்டமைப்புக்களும், நாம் தினசரி தங்கியிருக்கும் கணினிகளும், வலையமைப்புக்களும், எமது முக்கிய தேசிய சொத்துக்களாக கருதப்பட வேண்டும். என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் சைபர் யுத்தம் ஒன்று நடைபெற்று வளர்ந்து வருகின்றது. ஒவ்வொரு தரப்பும், தங்களது எதிர் தரப்பானது, ஹேக்கர்களின்(Hackers) இராணுவம் ஒன்றை வைத்து தங்களின் மீது சைபர் தாக்குதல்களை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளன. (குறிப்பு: ஹேக்கர்கள் எனப்படுவோர், கணினி வலையமைப்புக்களை ஊடறுத்து தகவல்களை களவாடுவதில் அல்லது மாற்றுவதில் விற்பன்னர்கள் என பொருள் கொள்ளலாம்)
இந்த யுத்தத்தின் பிரதானமான போராட்ட களமாக கூகிள் (Google) நிறுவனத்தின் வழக்கு அமைந்துள்ளது. இவ்வமெரிக்க நிறுவனமானது, தணிக்கைகள், அரசாங்க பின்புலத்துடன் நடைபெறும் ஹேக்கிங் நடவடிக்கைகள் தொடர்பிலான சீன அரசாங்கத்துடன் ஏற்பட்ட பிணக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு, பகுதியளவில் சீனாவிலிருந்து வெளியேறியது.
tumblr_kxj0kgwzlk1qzp3kyo1_500.jpg
கூகிள் நிறுவனத்தின் உதவியுடன் தங்களது நாட்டை வேவு பார்ப்பதாக சீனா அமெரிக்காவை குற்றம் சாட்டும் அதேவேளை, தங்களது நிறுவன ஊழியர்களது மின்னஞ்சல் கணக்குகளை (Email Accounts) ஊடறுத்து தகவல்களை களவாடுவதாக கூகிள் நிறுவனம் சீனாவை குற்றம் சாட்டியுள்ளது.

சுதந்திரமான ஹேக்கர்களுக்கும், அரசாங்கங்களுக்காக துணை போகும் ஹேக்கர்களுக்கும் வேறுபாட்டை நாம் காண வேண்டும். சில நாடுகளின் அதிகாரிகள், தங்களது சுய இலாபங்களுக்காக திறமையுள்ள, சிறந்த தொழில்நுட்ப புலமையுள்ள ஹேக்கர்களை கூலிக்கு அமர்த்துகின்றனர். எதுவுமே சாத்தியமாக இருக்கும் இந்த கால கட்டத்தில், நாடுகள் ஒவ்வொன்றும் ஏனைய நாடுகளை குறை கூறுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த யுத்தத்தில் எல்லா தெரிவுகளும் திறந்த அமைப்பில் இருக்கின்றன. என்று சீன ஹேக்கரான ஹான் தெரிவிக்கிறார்.

ஐக்கிய அமெரிக்கா தனது முன்னாள்/இந்நாள் எதிரியான ஈரானுடனும் அண்மைக்காலங்களில் சைபர் யுத்தங்களில் ஈடுபட்டு வருகின்றது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஈரானிய அதிபர் தேர்தலில் மஹ்மூத் அஹ்மெடிநேஜாத் மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டில் ஏற்பட்ட ஈரானிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த சைபர் யுத்தம் ஆரம்பமாகி இருக்கும் என்று கருதப்படுகின்றது.
மக்களை ஆர்ப்பாட்டங்களுக்கு ஒன்று திரட்டும் ஊடகமாக எதிர் தரப்பினர் இணையத்தை பயன்படுத்துவதாக ஈரானிய அதிகாரிகள் கருதினர். இதனால் அவ்வதிகாரிகள் இணையத் தொடர்பை துண்டித்து விட கருதினர்.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் YouTube, Twitter போன்றவற்றை தொடர்ந்தும் உபயோகித்தனர். Twitter  நிறுவனம் தமது வழமையான பராமரிப்பிற்காக தமது சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த கருதிய போது, ஐக்கிய அமெரிக்க அரசு செயலாளர் ஹிலறி கிளிண்டன், ஆர்ப்பாட்டங்கள் தொடரும் வரை சேவையை தொடர்ந்து ஆன்லைனில் வைக்குமாறு கோரினார்.

மின் கண்களும், மின் காதுகளும்
இஸ்ரேல் அரசானது, தங்களது முக்கிய வலையமைப்புக்களை இணைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக, மத்திய கிழக்கில் சைபர் கட்டளை தலைமையகத்தை (Cyber Command) நிறுவி உள்ளது. தங்களது தொழில்நுட்ப வல்லமைகளை காண்பிப்பதற்காக இஸ்ரேல், தமது எல்லை புறங்களையே தெரிவுசெய்கின்றன. லெபனானுடனான வட புற எல்லையில் இஸ்ரேல், பாரிய மின் கண்களும், மின் காதுகளும் கொண்ட ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் தற்போது  நடைபெறும் உளவுத்துறை யுத்தத்தில் அதிகளவில் அதிநவீன மின்னியல் கருவிகளே உபயோகப்படுத்தப்படுகின்றன.
பெப்ரவரி 2010 இல், தன்னை (இஸ்ரேல்)மொசாட் இனுடைய உளவாளி என்று ஒப்புக்கொண்ட ஒருவரை லெபனான் கைது செய்தது. அவர், அதிநவீன கண்காணிப்பு சாதனத்தொகுதி ஒன்றை தன்னுடைய காரினுள் மறைக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்த கணினியையும், கையடக்க தொலைபேசியையும் உபயோகித்து இஸ்ரேலிலுள்ள தன்னுடைய கையாட்களுக்கு சமிக்ஞைகள் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
கேட்பதற்கு விஞ்ஞான புனை கதை போன்று இருந்தாலும், இக்கிரகத்திலுள்ள ஒவ்வொரு தொலை பேசி அழைப்பையும், மின்னஞ்சலையும் ஒற்று கேட்கும்/பார்க்கும் சர்வதேச உளவு பார்க்கும் வலையமைப்பு ஒன்று இருப்பது உண்மை.
சரியான கருவிகள் உள்ள நிலையில் தொலைபேசி அழைப்புக்களையும், குறுஞ்செய்திகளையும் ஒற்று கேட்பது/பார்ப்பது நாளுக்கு நாள் இலகுவடைகின்றது. விஷேடமாக இன்று உலகளாவிய ரீதியில் அதிகளவிலான தொலைபேசி வலையமைப்புகளில் உபயோகப்படுத்தப்படும் GSM தொழில்நுட்பமானது இதனை இன்னும் இலகுபடுத்துகின்றது.

உங்களது கைத்தொலைபேசியை 30 செக்கன்களுக்கு என்னிடம் தாருங்கள், 30 செக்கன்கள் தனியாக உங்களது கைத்தொலைபேசியுடன் என்னை விடுங்கள், உங்களது கைத்தொலைபேசியை பயணிக்கும் ஒலிவாங்கியாக செயல்படுவதற்கான மென்பொருளை அதனுள் நிறுவுவேன். அந்த கணத்திலிருந்து, அது பணிநிறுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், உங்களது கைத்தொலைபேசி, நான் தீர்மானிக்கும் ஒரு இலக்கத்தினூடாக உங்களை சுற்றியுள்ள அனைத்தையும் ஒலிபரப்பும் என்று Alon Ben David  மேலும் தெரிவிக்கின்றார்.

துணிச்சலான புதியதோர் உலகமா?
இணைய பயனர்கள், பாரிய அளவிலான தனியார் தகவல்களை சமூக வலைத்தளங்களுக்கு தன்னார்வத்துடன் வழங்குவதையிட்டு அநேகமான ஆய்வாளர்கள் வியப்படைகின்றனர்.
மேலும், ஒருவருடைய கைத்தொலைபேசியிலோ, கணினியிலோ தகவல்களை திருடும் நோக்கத்துடன் மென்பொருட்களை நிறுவுவது ஐந்தாவது பரிமாணத்தில் நிகழும் யுத்த முறைமைகளில் புதியதோர் யுத்த உத்தியாக பரிணமித்துள்ளது.

தனிப்பட்ட தகவல்கள், மின்னஞ்சல்கள், கிரெடிட் கார்டுகள் என்று எமது முழு வாழ்வும் இணையத்திலேயே உள்ளது. Facebook, Google, Amazon போன்ற தளங்களுக்கு இத்தகவல்கள் அனைத்தையும் வழங்குகின்றோம். இத்தளங்களில் இருக்கும் தகவல்களின் அளவை அறிந்து, அரசாங்கங்கள் இவர்களின் மீது அதிகளவான அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. இவ்வரசாங்கங்கள் இத்தளங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை கோரும் போது, அவர்கள் கேட்டதை கொடுத்தன, கொடுத்துக்கொண்டும் இருக்கின்றன என்று தகவல் தொழில்நுட்ப நிபுணரான மர்வான் தாஹிர் குறிப்பிடுகின்றார்.

நாம் அனைவரும் துணிச்சலானதொரு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதனால் விளையப்போகும் சாத்தியக்கூறுகள் எல்லையற்றதாகவும், முடிவற்றதாகவும், நிச்சயிக்க முடியாததாகவும் எண்ணத்தோன்றுகின்றது.